Followers

Monday, October 8, 2012

பொன் மொழிகள்.......


அஸ்ஸலாமு அலைக்கும் 
வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..

பொன் மொழிகள்.......


குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்.
(அறிவிப்பாளர்: உஸ்மான்(ரலி) – ஆதாரம் : புகாரி)






__________________________________________________
இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலு

ம் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : தப்ரானி )

                                                                 
                                                                   
__________________________________________________
பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். (ஆதாரம் : முஸ்லிம்)

                                                                                

__________________________________________________
இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே.
(அறிவிப்பாளர்: உமர்(ரலி) - ஆதாரம் : முஸ்லிம்)

                                                                                      

___________________________________________________
குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது.
(அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) – ஆதாரம் : திர்மிதி)


                                                                             


கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி). நூல்: முஸ்லிம்.
____________________________



                                                                                        

______________________
பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்: அபூதாவூத்;.

                                                                              
__________________________________________________
நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென்று எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
__________________________________________________
எவன் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். எவன் ஒரு முஸ்லிமை கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனை கஷ்டத்தில் ஆழ்த்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸிர்மா (ரழி). நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.
___________________________________________________
செயல்களில் சிறந்தது தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

                                                                            

___________________________________________________
நமக்கும் அவர்களுக்குமிடையே (காபிர்களுக்கு மிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரழி). நூல்கள் : திர்மிதி, அபூதாவுத், அஹ்மது, இப்னுமாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான்.

                                                                                   

 ___________________________________________________
இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன்களுக்கு பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜாமாஅத்தும். இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயி.

                                                                              


___________________________________________________
இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி). நூல் :திர்மிதீ.

                                                                        
  

தொழுகையில் இமாமுக்கு மறதி ஏற்படும்போது ஆண்கள் ''ஸூப்ஹானல்லாஹ்'' என்று கூறவேண்டும், பெண்கள் கையைத் தட்ட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.



                                                                                


____________________________________________________
******************************************
                        அஹமட் யஹ்யா..
                                                                ஹொரோவபதான
                                                                      அனுராதபுரம்
                                                                          SRI LANKA




************************************************************************************ 

No comments:

Post a Comment